காயீனின் மனைவி
✴காயீனின் மனைவி:
✳ தேவன் ஒருவனையே (ஆதாம்) படைத்தார்.
அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
மல்கியா 2:15
✳ காயீன் தன் சகோதரியை மனைவியாக கொண்டான்
✳அது பாவமல்ல என்பதற்கு உதாரணங்கள் :
நியாயப்பிரமாணத்தின்படி
1⃣ தன் தகப்பன் குமாரத்தியை சேரக்கூடாது.லேவி.18:9.
2⃣ தன் மனைவியின் சகோதரியை சேரக்கூடாது
லேவி.18:18.
3⃣ தகப்பன் சகோதரியை சேரக்கூடாது
லேவி.18:12.
4⃣ நெருங்கின இனமானவளை விவாகம்பண்ணக்கூடாது.
லேவி. 18:6.
நியாயப்பிரமாணத்துக்கு முன்
1⃣ஆபிரகாம் தன் தகப்பன் குமாரத்தியை சாராளை விவாகம் பண்ணினான்.ஆதி.20:12.
2⃣யாக்கோபு தன் மனைவியின் சகோதரியை லேயாளின் சகோதரி ராகேலை விவாகம்பண்ணினான்.ஆதி.29:23,28.
3⃣அம்ராம் தன் தகப்பன் சகோதரியை யோகெபேத்தை விவாகம் பண்ணினான்.யாத்.6:20.
4⃣நாகோர் தனக்கு நெருங்கின இனமானவளை சகோதரன் மகளை விவாகம் பண்ணினான்.ஆதி.11:29.
⚛ஆபிரகாம், யாக்கோபு, நாகோர், அம்ராம் போல காயீனும் நியாயப்பிரமாணத்துக்கு நீங்கலானவனானபடியால் தன் சகோதரியை மனைவியாக கொண்டது அவனுக்கு பாவமல்ல.
Comments
Post a Comment