ஏதேன் - லெமூரியா 2 (சாலமன், ஈராம்)

சாலமன் அரசனுடைய காலத்திற்

பினீசிய நாட்டுக் கரசனாகத் தையர்  - தீரு என்னும் பட்டினத்தில் இருந்தோன் ஹிராம் -ஈராம் .
பினீசியர் மாலுமித் தொழிலிற் சிறந்தவர்கள். இவர்களைத் துணைக்கொண்டு சாலமன் அரசனுடைய கப்பல்கள் கிழக்குத் தேசங்களுக்குச் சென்று

ஓபீர் (உவரி) என்னுந் துறைமுகத்திற் றங்கிப்
பொன், வெள்ளி, யானைத்தந்தம், மயில், குரங்கு, நவமணி முதலியவற்றை ஏற்றிக்கொண்டு திரும்பின. எபிரேய அரசனான சாலமன் கி.மு. 1000 வரையிற் சீவித்தவன். தமிழ்நாட்டினின்றும் சென்ற ஒவ்வொரு பண்டங்களும் எபிரேய நாட்டில் தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்பட்டன.
தமிழ் அகில், எபிரேயமொழி அஹல்,
தமிழ் தோகை (மயில்), எபிரேய மொழி துகிம்,
தமிழ் கவி (குரங்கு), எபிரேயமொழி கொவ். கிரேக்கமொழியில் ஒரிசா என்பது அரிசி என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு.
பெப்பரி என்பது திப்பிலி என்பதன் திரிபு. கிரேக்கரும் தமிழ் நாட்டிலிருந்து அரிசி மிளகு முதலிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Comments

Popular posts from this blog

பகலும் இரவும் 8 யாமங்கள்

வானங்களின் சர்வ சேனை

6 காலங்கள்