பூமியின் சர்வசேனை 1

💮 உண்டாகக்கடவது : -
     " உண்டாயிற்று " என்று ஆதி.1:3 ம்,
" ஆயிற்று " என்று ஆதி.1:7,9,11,15,24 ம் நாம் வாசிக்கிறோம்.
        ஆனால், ஆதி.2:5ல்  "உண்டாகவில்லை" , "முளைக்கவில்லை" என்று காண்கிறோம்.
   நாம் சிலவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.
   ஆதி 2:4 ன் படி அவை வரலாறு மட்டுமே.
"உண்டாகக்கடவது" என்றால் "கிரமத்தின்படி ஆகக்கடவது" எனப்படும்.
அந்த கிரமங்களை கீழ் வரும் வரிசையில் காண்போம்.

  1⃣ ம் நாளில்
" வெளிச்சம் உண்டாகக்கடவது ". வெளிச்சம் அன்று தான் வந்தது என்பது பொருள் அல்ல.
🅾  தேவன் ஒளியாயிருக்கிறார், ....
1 யோவான் 1:5.
🅾  ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், ......
1 தீமோத்தேயு 6:16.
💮💮 1 ம் நாளில் நடந்ததைப் பற்றி.
  2கொரி. 4:6 ல் (இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் .......) என்று வாசிக்கிறோம்.

💮 விழுந்து போன தூதர்களின் விழுகையினால் இருளானது பூமியின் ஆழத்தின்மேல் பிரவேசித்தது.ஆதி.1:2.
வானங்களுக்கும் ஒளி இல்லாதிருந்தது. எரே. 4:23.
💮 இருளானது எப்படி ஒரு மூலம் (source) இல்லாமல் இருக்க முடிகிறதோ, அதைப்பார்க்கிலும் அதிக விசேஷம் வாய்ந்த வெளிச்சமும் கூட மூலம் (source) இல்லாமல் தேவனுடைய வார்த்தையின் வல்லமையினால் பிரகாசித்தது.

4⃣ ம் நாளில்
      சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்.
    ⏭ பிரகாசிக்க,
    ⏭ பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க,
    ⏭ அடையாளங்களுக்காக,
    ⏭ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக,
    ⏭ பகல் இரவை ஆள
ஆதி. 1:14-18.


Comments

Popular posts from this blog

பகலும் இரவும் 8 யாமங்கள்

வானங்களின் சர்வ சேனை

6 காலங்கள்